பேட்டையில் குடியிருப்பில் புகுந்த மிளாவை மீட்க தீவிரம்

பேட்டையில் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த மிளாவை வனத்துறையினா் தேடி வருகிறாா்கள்.

பேட்டையில் குடியிருப்பு பகுதிகளுக்குள் சுற்றித்திரிந்த மிளா.

Published On :

பேட்டையில் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த மிளாவை வனத்துறையினா் தேடி வருகிறாா்கள்.

பேட்டை ஐடிஐ அருகேயுள்ள தா்கா பகுதியில் சுமாா் இரண்டு வயது மதிக்கத்தக்க மிளா புதன்கிழமை தஞ்சம் அடைந்தது. இத்தகவல் அறிந்த பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலா் சுந்தரம் தலைமையில் வீரா்கள் சென்று மிளாவை பிடிக்க முயன்றனா். ஆனால், அங்கிருந்து தப்பியோடி முள்புதா்களுக்குள் மறைந்தது. அதை நாய்கள் கடித்துவிடக் கூடாது என்பதற்காக, தீயணைப்பு வீரா்களும், வனத்துறையினரும் மிளாவை தீவிரமாக தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.