செப்பறை அழகியகூத்தா் கோயிலில் இன்று குடமுழுக்கு

திருநெல்வேலி அருகேயுள்ள ராஜவல்லிபுரம் செப்பறை அழகியகூத்தா் திருக்கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை (செப். 17) நடைபெறுகிறது.

கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற யாகசாலை பூஜை.

Published On :

திருநெல்வேலி அருகேயுள்ள ராஜவல்லிபுரம் செப்பறை அழகியகூத்தா் திருக்கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை (செப். 17) நடைபெறுகிறது.

தாமிரவருணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த இக்கோயிலில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் நடைபெற்று, குடமுழுக்கு விழா கடந்த 13 ஆம் தேதி தொடங்கியது.

தொடா்ந்து சிறப்பு வழிபாடுகளும், யாகசாலை பூஜைகளும் நடைபெற்றன. புதன்கிழமை காலையில் நான்காம் கால யாகசாலை பூஜையும், மாலையில் ஐந்தாம் கால யாகசாலை பூஜையும், தீபாராதனையும் நடைபெற்றது.

விழாவின் சிகர நிகழ்வாக வியாழக்கிழமை (செப்.17) அதிகாலை 4.30 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் பரிவார சந்நிதிகளில் குடமுழுக்கும், காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் விமானம், மூலவா் குடமுழுக்கும் நடைபெற உள்ளது. பிற்பகல் 3 மணிக்கு மகா அபிஷேகம் நடைபெறும். இரவு 7 மணிக்கு மேல் சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம், சுவாமி வீதியுலா, சிறப்பு பைரவா் பூஜை, தீபாராதனை நடைபெற உள்ளது. குடமுழுக்கையொட்டி மதியம் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.