சாத்தான்குளம் வட்டார ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சாத்தான்குளம் வட்டார புதிய நிர்வாகிகள் தேர்வு சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. தேர்தல் ஆணையர்களாக கோவில்பட்டி வட்டாரச் செயலர் சகாயராஜ், துணை தேர்தல் ஆணையராக கோவில்பட்டி வட்டாரப் பொருளாளர் கருப்பசாமி செயல்பட்டனர்.
இதில் வட்டாரத் தலைவராக செல்லப்பா, செயலராக அந்தோணி சார்லஸ், பொருளாளராக ஸ்டீபன்தாஸ், துணைத் தலைவர்களாக ஜெயமேரி, ரோசாலி விஜிதா, துணைச் செயலர்களாக பிரின்ஸ் ஜட்சன், விக்டர்மேரிகீதா, சிறியபுஷ்பராணி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்களாக அகஸ்டின், ஜாண்சன் மாணிக்கத்துரை, வர்க்கீஸ்ராஜா ஆகியோரும் , வட்டார செயற்குழு உறுப்பினர்களாக இம்மானுவேல் ஜோசப், பாலகிருஷ்ணன், ஆல்வின், ராஜசேகர், தேவராஜ் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளை மாவட்டச் செயலர் செல்வராஜ், முன்னாள் மாவட்ட செயலர் முத்தையா, ஆழ்வார்திருநகரி வட்டார முன்னாள் செயலர் கீதராஜ் , முன்னாள் மாவட்ட பொருளாளர் சம்பத்சாமுவேல், மாவட்ட பொருளாளர் சேகர் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜே. சமாதானபீற்றர், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் சுந்தரலிங்கம், முன்னாள் ஆழ்வார்திருநகரி வட்டாரத் தலைவர் பாஸ்கர், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.