பரமன்குறிச்சி அருகே வட்டன்விளை ஸ்ரீ முத்தாரம்மன் கோயில் கொடை விழாவின் மூன்றாம் நாளான திங்கள்கிழமை காலையில் 108 பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
இத்திருக்கோயிலில் சித்திரைக் கொடை விழா சனிக்கிழமை வருஷாபிஷேகத்துடன் தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை காலையில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், இரவு 8.30 மணிக்கு 108 திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது.
திங்கள்கிழமை காலை 9 மணிக்கு 108 பால்குட ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியே சென்று மீண்டும் கோயிலை அடை ந்தது. தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு வகையான திரவியங்களால் அபிஷேகம், சிறப்பு அலங்கார, தீபாராதனை நடைபெற்றது. இரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
செவ்வாய்க்கிழமை பகல் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை, கும்பம் வீதி வருதல், இரவு 7 மணிக்கு 504 சுமங்கலி பூஜை, இரவு 9 மணிக்கு பொம்மலாட்டம், 12 மணிக்கு மாரியம்மன் கிளி வாகனத்தில் பவனி ஆகியவை நடைபெறும்.
சுமங்கலி பூஜையை தொழிலதிபர் ஸ்ரீதேவி சுதாகர் தொடங்கி வைக்கிறார். சிறப்பு அழைப்பாளராக இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் பங்கேற்கிறார்.
புதன்கிழமை பகல் 12 மணிக்கு மஞ்சள் நீராடுதல், கும்பம் வீதியுலா, இரவு 8 மணிக்கு மாவிளக்கு பூஜை, கரகாட்டம், இரவு 12 மணிக்கு அம்மன் சப்பர பவனி ஆகியவை நடைபெறும். சப்பர பவனியை சென்னை தொழிலதிபர் சுதாகர் தொடங்கி வைக்கிறார். வியாழக்கிழமை அதிகாலை 3 மணிக்கு பூக்குழி இறங்குதல் நடைபெறும்.
ஏற்பாடுகளை வட்டன்விளை ஊர்மக்கள் செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.