கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கயத்தாறு நூலகத்தில் புத்தகக் கண்காட்சி

கயத்தாறு நூலகத்தில் சிறுவர்களுக்கான புத்தகக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 1:51 am

DIN

கயத்தாறு நூலகத்தில் சிறுவர்களுக்கான புத்தகக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
கோடை விடுமுறையை முன்னிட்டு பள்ளி மாணவர், மாணவிகளுக்கான புத்தகக் கண்காட்சி கயத்தாறு நூலகத்தில் நடைபெற்றது. 
இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி நாடார் மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் ஜான்கணேஷ் தலைமை வகித்து, இனிப்பு எடு கொண்டாடு, வெற்றி நிச்சயம் என்ற நூல்களை நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கினார். 
நூலகப் புரவலர் முத்துமுருகன், ஓய்வு பெற்ற நூலகர் பாடகலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புத்தகக் கண்காட்சியை பிள்ளையார்நத்தம் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியை மணிமதி திறந்து வைத்துப் பார்வையிட்டார். புத்தகக் கண்காட்சியை ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் பூலையா, நூலக வாசகர் சுப்பையா உள்பட திரளான பள்ளி மாணவர், மாணவிகள் கண்காட்சியைப் பார்வையிட்டனர்.  மாணவர் முத்துகணேஷ் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.