யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தூத்துக்குடி சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமி: வங்கிப் பணிக்கு தேர்வானவர்களுக்கு பாராட்டு

தூத்துக்குடி சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் படித்து வங்கிப் பணிக்குத் தேர்வான 222 பேருக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 1:52 am

DIN

தூத்துக்குடி சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் படித்து வங்கிப் பணிக்குத் தேர்வான 222 பேருக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடியில் உள்ள சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் படித்தவர்களில் குரூப்-2 தேர்வில் 103 பேரும்,  வங்கி அதிகாரி மற்றும் உதவியாளர் பணிக்கு 222 பேரும் தேர்வு செய்யப்பட்டனர்.  அவர்களில் 103 பேருக்கு பாராட்டு விழா கடந்த 15 ஆம் தேதி நடைபெற்றது.
இந்நிலையில், வங்கிப் பணிக்கு தேர்வான 222 பேருக்கு பாராட்டு விழா, அகாதெமியில் உள்ள அப்துல்கலாம் கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  
 நிறுவனர் து. சுகேஷ் சாமுவேல் தலைமை வகித்தார்.  வங்கிப் பணி தேர்வு ஒருங்கிணைப்பாளர் டி.எம். ராஜா முன்னிலை வகித்தார். தொடர்ந்து, வங்கிப் பணிக்கு தேர்வான 222 பேருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.  பின்னர், அவர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.  இதில், அகாதெமியில் படித்து வரும் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர், சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமி நிறுவனர் து. சுகேஷ் சாமுவேல் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் குறைந்த பயிற்சிக் கட்டணத்தில்  போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளித்து வருகிறோம்; ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் பாரத ஸ்டேட் வங்கிப் பணிக்கு மே 13 ஆம் தேதியும், குரூப்-1 மற்றும் 2 தேர்வுக்கு மே 27 ஆம் தேதியும் பயிற்சி வகுப்புகள் தொடங்குகிறது என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.