
தூத்துக்குடியில் டிச. 21 இல் தொழில் கண்காட்சி தொடக்கம்
தூத்துக்குடியில் தொழில் கண்காட்சி டிச. 21 ஆம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகிறது.
தூத்துக்குடியில் தொழில் கண்காட்சி டிச. 21 ஆம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகிறது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட சிறு தொழில் சங்கம் ( துடிசியா) தலைவர் நேரு பிரகாஷ் வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடி மாவட்ட சிறு தொழில் சங்கம் ( துடிசியா ) சார்பில், " மேட் இன் தூத்துக்குடி" என்ற பெயரில், தூத்துக்குடியில் உற்பத்தியாகும் பொருள்கள் மற்றும் சேவைகள் குறித்த கண்காட்சி ஏவிஎம் கமலவேல் மகாலில் வெள்ளிக்கிழமை (டிச. 21) காலை 10.30 மணிக்கு தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தை தொழில் துறையில் முன்னேறிய மாவட்டமாக முன்னிறுத்துவதும், மாவட்டத்தில் தொழில் தொடங்குவதற்கு சாதகமாக சூழ்நிலையை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவமே கண்காட்சியின் நோக்கம் ஆகும்.
தொடக்க விழாவில், ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு ஆகியோர் கலந்து கொள்கின்றனர். கண்காட்சியில் பொதுமக்கள் திரளாக வந்து பார்வையிட்டு தூத்துக்குடி நகரின் தொழில் பெருமை மற்றும் தொழில் வாய்ப்பை அறிந்து கொள்ள வேண்டுகிறோம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





