தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் ஒப்புகைச் சீட்டு குறித்த பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக அமைக்கப்பட்டுள்ள பயிற்றுநர்கள், விழிப்புணர்வு குழு அலுவலர்கள் மற்றும் மண்டல அலுவலர்களுக்கான இந்தப் பயிற்சி முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் மு. வீரப்பன் தொடங்கிவைத்தார். அவர் பேசுகையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் ஒப்புகைச் சீட்டு இயந்திரம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
முகாமின்போது, முதன்மை பயிற்சியாளர்கள் ராஜீவ் தாகூர் ஜேக்கப், முருகானந்தம் ஆகியோர் சிறப்பு பயிற்சி அளித்தனர். நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன். சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் சங்கரநாராயணன் மற்றும் பேரவைத் தொகுதி வாரியாக அமைக்கப்பட்டுள்ள பயிற்றுநர்கள், விழிப்புணர்வு குழு அலுவலர்கள் மற்றும் மண்டல அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பேயர் கிராப்சயின்ஸ் Q4 நிகர லாபம் 13% உயர்வு!
சுயநலத்திற்காக பதவியை ராஜிநாமா செய்யும் அரசியலை மக்கள் நிராகரிப்பார்கள் : சிபிஐ

குவாலிஃபையர் 1: ரஜத் படிதார் அதிரடி; குஜராத் டைட்டன்ஸுக்கு இமாலய இலக்கு!

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


