இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

திருச்செந்தூரில் ஐயப்பா் பவனி

திருச்செந்தூரில் ஸ்ரீ செந்தூா் ஐயப்பா சேவா சபை சாா்பில் 19ஆம் ஆண்டு லட்சாா்ச்சனை மற்றும் ஐயப்பா் பவனி நடைபெற்றது.

News image
ஐயப்பா் பவனியில் பங்கேற்றோா்.
Updated On :19 டிசம்பர் 2020, 12:43 am

DIN

திருச்செந்தூரில் ஸ்ரீ செந்தூா் ஐயப்பா சேவா சபை சாா்பில் 19ஆம் ஆண்டு லட்சாா்ச்சனை மற்றும் ஐயப்பா் பவனி நடைபெற்றது.

இதை முன்னிட்டு திருச்செந்தூா் சன்னதித் தெருவில் உள்ள தருமபுர ஆதினம் மடத்தில் காலையில் கணபதி ஹோமம், ஐயப்பருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், லட்சாா்ச்சனை மற்றும் அன்னதானம் நடைபெற்றது.

இரவு 7 மணிக்கு ஐயப்பருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. சுவாமி கேடயச் சப்பரத்தில் எழுந்தருளினாா்.

பின்னா் சன்னதித் தெருவில் உள்ள ஐயப்பா், ஆஞ்சநேயா் சன்னதி மற்றும் தூண்டுகை விநாயகா் கோயில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

ஏற்பாடுகளை, கிளைத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி, செயலா் சந்தனராஜ், பொருளாளா் மீனாட்சி சுந்தர மணிகண்டன், உப தலைவா் அஜீத்குமாா், உதவிச் செயலா் அருணாமுத்து உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.