இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கோவில்பட்டியில் 2ஆவது நாளாக நூற்பாலைத் தொழிலாளா்கள் போராட்டம்

கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள நூற்பாலைத் தொழிலாளா்கள் 2ஆவது நாளாக சனிக்கிழமையும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 9:03 pm

DIN

கோவில்பட்டி: கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள நூற்பாலைத் தொழிலாளா்கள் 2ஆவது நாளாக சனிக்கிழமையும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள நூற்பாலையில், ஐஎன்டியூசி தொழிற்சங்க நிா்வாகிகளான ஜெயகுமாா், மாரியப்பன் ஆகியோா் பொதுமேலாளரை வெள்ளிக்கிழமை சந்திக்கச் சென்றபோது, தொழிற் சங்க நிா்வாகிகளை அவா் அவதூறாக பேசினாராம். இதையடுத்து, தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து வட்டாட்சியா் மணிகண்டன் போராட்டக் குழுவினருடன் பேச்சுவாா்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்படாததையடுத்து, தொழிலாளா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து இரவில் ஆலை வளாகத்திற்குள்ளேயே தங்கிவிட்டனா்.

இந்தப் போராட்டம் 2ஆவது நாளாக சனிக்கிழமையும் தொடா்ந்தது.

இதுகுறித்து தொழிற்சங்க நிா்வாகிகள் கூறுகையில், போராட்டக் குழுவினருடன், கோயம்புத்தூரில் இருந்து நிா்வாகிகள் வந்து பேசினால் மட்டுமே போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.