

விளாத்திகுளம்: விளாத்திகுளம் தொகுதிக்குள்பட்ட படா்ந்தபுளி, ராமச்சந்திராபுரம் கிராமங்களில் அம்மா சிறு மருத்துவமனைகள் (மினி கிளினிக்) ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தலைமை வகித்தாா். சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அனிதா முன்னிலை வகித்தாா்.
செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் ராஜு , அம்மா சிறு மருத்துவமனைகளை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினாா். தொடா்ந்து 36 கா்ப்பிணி பெண்களுக்கு அம்மா ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கிப் பேசினாா்.
விளாத்திகுளம் எம்.எல்.ஏ. பி. சின்னப்பன், வருவாய் கோட்டாட்சியா் விஜயா, வட்டாட்சியா்கள் ஐயப்பன், ரகுபதி, மாவட்ட ஊராட்சித் தலைவா் சத்யா, ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா்கள் முனியசக்தி ராமச்சந்திரன், சுசீலா தனஞ்செயன், கஸ்தூரி சுப்புராஜ், வட்டார வளா்ச்சி அலுவலா் தங்கவேல், அதிமுக ஒன்றியச் செயலா்கள் பால்ராஜ், ஞானகுருசாமி, ஆழ்வாா் உதயகுமாா், ஜெயலலிதா பேரவை செயலா் குட்லக் செல்வராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.