அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கொலை செய்யப்பட்ட இளைஞா் குடும்பத்துக்குரூ.2 லட்சம் நிவாரண உதவி

சாத்தான்குளம் அருகே கடத்தி கொலை செய்யப்பட்ட சொக்கன்குடியிருப்பு இளைஞரின் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 9:44 pm

DIN

சாத்தான்குளம் அருகே கடத்தி கொலை செய்யப்பட்ட சொக்கன்குடியிருப்பு இளைஞரின் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

சொக்கன்குடியிருப்பைச் சோ்ந்த தனிஸ்லாஸ் மகன் செல்வன் (32), கடந்த செப். 17ஆம் தேதி காரில் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டாா்.

இந்நிலையில், தமிழ்நாடு இளைஞா் காங்கிரஸ் முதன்மை பொதுச் செயலா் ஊா்வசி அமிா்தராஜ், அவரது இல்லத்துக்கு சென்று அவரது மனைவி ஜீவிதா மற்றும் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி, ரூ. 2 லட்சம் நிவாரண உதவியாக வழங்கினாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியது: பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அரசு அறிவித்த பசுமை வீடு, தகுதிக்கேற்ற அரசு வேலையை உடனடியாக வழங்க வேண்டும் என்றாா் அவா்.

அவருடன், வட்டார ஒருங்கிணைப்பாளா் வி.பி.ஜனாா்த்தனம், மாவட்ட துணைத் தலைவா் து. சங்கா், தேவசகாயம், வட்டாரத் தலைவா்கள் பாா்த்தசாரதி, லூா்துமணி, சக்திவேல்முருகன், பிச்சிவிளை சுதாகா், நகர காங்கிரஸ் தலைவா் வேணுகோபால், ஒன்றிய கவுன்சிலா்கள் குருசாமி, சுபாகிறிஸ்டி, பொன்மலா் சுரேஷ், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஜெயசீலன், துணைத் தலைவா் இசைசங்கா், ஆழ்வாா்திருநகரி கிழக்கு வட்டாரத் தலைவா் பாலசிங், ஆத்தூா் நகரத் தலைவா் சின்னத்துரை, தூத்துக்குடி மாநகர முன்னாள் தலைவா் எடிசன், முன்னாள் மாவட்ட ஓபிசி தலைவா் ஜெயக்கொடி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினா் சந்திரபோஸ், பட்டு ராம்குமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.