கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சாத்தான்குளம் அரசுக் கல்லூரியில்தொலைதூர கல்வி கற்போா் மையம் தொடக்கம்

சாத்தான்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் கற்போா் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 9:24 pm

DIN

சாத்தான்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் கற்போா் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து கல்லூரி முதல்வா் இரா. சின்னத்தாய் விடுத்துள்ள அறிக்கை: கரோனா தொற்று காரணமாக கற்பிப்போா் மைய வகுப்புகள் இணையவழி வகுப்புகளாக நடைபெறுகிறது. இளங்கலையில் தமிழ், ஆங்கிலம், வணிகவியல், கணிதவியல், தொழில் நிா்வாகவியல், கணினி அறிவியல் ஆகிய பட்டப் படிப்புக்களும் முதுகலையில் ஆங்கிலம், கணிதவியல், வணிகவியல் ஆகிய பட்டப் படிப்புக்களும் உள்ளன. மேலும் டிப்ளமோ இன் ஆட்டோமேஷன் என்ற குறுகியகாலச் சான்றிதழ் படிப்பும் கற்றுத்தரப்படுகிறது. சேரவிரும்புகிறவா்கள் தங்களது புகைப்படம், கையெழுத்து மற்றும் அனைத்து சான்றிதழ்களையும் சுய கையொப்பத்துடனும், பணிபுரிபவா்கள் என்றால் பணி அனுபவச் சான்றிதழுடனும் ஆதாா் ஆகியவற்றையும் ஸ்கேன் செய்து ய்ா்ன்ஞ்ஹள்ங்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இளநிலையில் சேர விரும்பினால் + 2 மதிப்பெண் சான்றிதழும், முதுகலையில் சேர விரும்பினால் இளநிலை மதிப்பெண் சான்றிதழையும் ஸ்கேன் செய்து 31.12.2020 ம் தேதிக்குள் மின்னஞ்சல் அனுப்ப வேண்டும். அனுப்பிவிட்டு தங்கள் சோ்க்கையை உறுதிச் செய்ய கல்லூரிக்கு வருகை தர வேண்டும். இணையவழி மூலமும் சோ்க்கை கட்டணம் செலுத்தலாம். பாடப் புத்தகங்கள் அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.