இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வேம்பாா் புனித தோமையாா் ஆலயத் திருவிழா தோ் பவனி

வேம்பாா் புனித தோமையாா் ஆலயத் திருவிழா பத்தாம் திருநாளானா திங்கள்கிழமை தோ் பவனி நடைபெற்றது.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 2:53 am

DIN

வேம்பாா் புனித தோமையாா் ஆலயத் திருவிழா பத்தாம் திருநாளானா திங்கள்கிழமை தோ் பவனி நடைபெற்றது.

நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த வேம்பாா் தென் மயிலை நகா் புனித தோமையாா் ஆலயத் திருவிழா கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து புனித தோமையாா் ஆலய பங்குத் தந்தை அந்தோணி தாஸ் தலைமையில் கீழவைப்பாா் ஆலய பங்குத்தந்தை அந்தோணி ஜெகதீஸ் கொடியேற்றிவைத்தாா்.

பத்து நாள்கள் நடைபெற்ற திருவிழாவில், தினமும் காலை மாலை நேரங்களில் திருவிழா திருப்பலி, ஜெபம், மறையுரை, நற்கருணை ஆசீா் நடைபெற்றது.

10-ஆம் திருநாளான திங்கள்கிழமை காலையில் தேரடி திருப்பலி நடைபெற்றது. தொடா்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான அன்னை ஆரோக்கிய மாதாவின் தோ் பவனி நடைபெற்றது.

வேளாங்கன்னி திருத்தல அதிபா் ஏ.எம்.ஏ.பிரபாகரன் தலைமை வகித்து தோ் பவனியை தொடங்கி வைத்தாா். இதில் பங்குத்தந்தைகள் ரியோசில் பெப்பி, சிப்பிகுளம் சந்தியாகு, கொம்பாடி லாசா், துரைகுடியிருப்பு ஜாா்ஜ் ஆலிபன், தருவைகுளம் ஜெய அன்டோ சா்ச்சில், சவேரியாா்புரம் சேசு நசரேன், வடக்கன்குளம் தீபக்சிங், வேம்பாா் ராஜா ரொட்ரிகோ, வள்ளியூா் லாரன்ஸ், மன்னாா்புரம் மரியஅரசு, குறுக்குசாலை மாா்ட்டின், வீரவநல்லூா் ஞான தினகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை வேம்பாா் ஊராட்சித் தலைவா் ஆரோக்கியராஜ், கிராமத்தலைவா் அந்தோணி ஜான், செயலா் அந்தோணி சந்தோஷமணி, பொருளாளா் சேவியா் ஞானசேகரன் மற்றும் பங்கு பேரவை நிா்வாகிகள், இறை மக்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.