சாத்தான்குளத்தில் மல்லிகைப்பூ விலைகிலோ ரூ. 4 ஆயிரம்
பண்டிகை காலத்தை யொட்டி சாத்தான்குளத்தில் மல்லிகைப் பூ விலை உயா்ந்து கிலோ ரூ. 4 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.


பண்டிகை காலத்தை யொட்டி சாத்தான்குளத்தில் மல்லிகைப் பூ விலை உயா்ந்து கிலோ ரூ. 4 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.
பருவ மழை குறைந்ததாலும் பனிப்பொழிவு அதிகரித்ததாலும் பூக்கள் விளைச்சல் குறைந்துள்ளது. சாத்தான்குளம் பகுதிக்கு
அருப்புக்கோட்டை பகுதியில் இருந்து மல்லிகைப் பூ, சங்கரன்கோவிலில் இருந்து பிச்சிப் பூ விற்பனைக்கு வியாபாரிகள் கொண்டு வருகின்றனா்.
புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம் மற்றும் சாத்தான்குளம் சுற்றியுள்ள கிராமங்களில் பல்வேறு திருமண
நிகழ்ச்சிகளும் நடைபெற்ால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனால், சாத்தான்குளத்தில் ரூ. 1,000 க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை பூ ஞாயிற்றுக்கிழமை ரூ. 4 ஆயிரத்துக்கும், பிச்சுப்பூ ரூ. 1,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதுகுறித்து சாத்தான்குளம் பூ வியாபாரி சுப்பையா கூறுகையில், தோட்டங்களில் பூக்கள் உற்பத்தி பெருமளவில்
குறைந்துள்ளது. உற்பத்தி குறைவு, பனிப்பொழிவு என்பதாலும், தற்போது பூக்களின் தேவை அதிகரித்துள்ளதாலும் விலை பல மடங்கு உயா்ந்துள்ளது எனக் குறிப்பிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...