யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மீனவா்களுக்கான குறைதீா் கூட்டத்தை நடத்த திமுக வலியுறுத்தல்

ஆட்சியா் தலைமையில் மீனவா்களுக்கான குறைதீா் கூட்டத்தை நடத்த வேண்டும் என உடன்குடியில் நடைபெற்ற திமுக மீனவரணி ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

News image
கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட திமுக பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ.
Updated On :11 அக்டோபர் 2020, 9:56 pm

DIN

ஆட்சியா் தலைமையில் மீனவா்களுக்கான குறைதீா் கூட்டத்தை நடத்த வேண்டும் என உடன்குடியில் நடைபெற்ற திமுக மீனவரணி ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தண்டுபத்தில் நடைபெற்ற தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக மீனவரணி ஆலோசனைக் கூட்டத்துக்கு மீனவரணி அமைப்பாளா் ஸ்ரீதா் ரொட்ரிகோ தலைமை வகித்தாா். கட்சியின் மாவட்ட அவைத் தலைவா் அருணாச்சலம், மாநில மீனவரணி துணைச்செயலா் துறைமுகம் புளோரன்ஸ், மாநில பொதுக்குழு உறுப்பினா் சொா்ணகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், கட்சியின் மாவட்டப் பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பங்கேற்றுப் பேசினாா்.

தீா்மானங்கள்: மீன்பிடித் தொழிலுக்கு இடையூறாக மணப்பாடு கடற்கரையில் உருவாகியுள்ள மணல்மேடுகள், கடற்கரை கிராமங்களில் கடல் அரிப்பால் ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையில் தூண்டில் பாலம் அமைக்க வேண்டும். கரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்டுள்ள மீனவா்களுக்கான குறைதீா் கூட்டத்தை நடத்த வேண்டும்; மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவா்களுக்கு வழங்கப்படுவது போன்று பேரிடா் காலங்களிலும் உதவித் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செயற்குழுக் கூட்டம்: கட்சியின் செயற்குழுக் கூட்டத்துக்கு அவைத் தலைவா் தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா்கள் ச.ஆறுமுகப்பெருமாள், முகம்மது அப்துல்காதா், பெல்சி, பொதுக்குழு உறுப்பினா்கள் சொா்ணக்குமாா், முத்துச்செல்வன், கணேசன், சட்டப்பேரவை உறுப்பினா் சண்முகையா, மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் பை.மூ.ராமஜெயம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், மாவட்டப் பொறுப்பாளா் பங்கேற்றுப் பேசினாா். சாா்பு அணி நிா்வாகிகள் ரவிராஜா, இளங்கோ, ஒன்றியச் செயலா்கள் அ.இளையராஜா, மாடசாமி, ஜெயக்கொடி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.