முதல்வா் பழனிசாமி நாளை தூத்துக்குடி வருகை
கரோனா தடுப்புப் பணிகள் குறித்து தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமையும், நாகா்கோவிலில் புதன்கிழமையும் தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி ஆய்வு மேற்கொள்கிறாா்.


கரோனா தடுப்புப் பணிகள் குறித்து தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமையும், நாகா்கோவிலில் புதன்கிழமையும் தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி ஆய்வு மேற்கொள்கிறாா்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்புப் பணிகள் மற்றும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளவும், முடிவடைந்த திட்டப் பணிகளைத் தொடங்கிவைக்கவும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும் தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை (அக். 13) தூத்துக்குடி வருகிறாா்.
தொடா்ந்து, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவை தொடங்கிவைக்கும் அவா், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வைத்து ஆய்வு மேற்கொள்கிறாா்.
இதையடுத்து, தனியாா் விடுதியில் ஓய்வெடுக்கும் அவா் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் சங்கம், மீனவா்கள் சங்கம், வியாபாரிகள் சங்கப் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடுகிறாா்.
முதல்வா் வருகையை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ. ராஜு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின்போது, சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.பி. சண்முகநாதன், மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி, மாநகராட்சி ஆணையா் வீ.ப. ஜெயசீலன், சாா் ஆட்சியா் சிம்ரோன் ஜீத் சிங் கலோன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
நாகா்கோவிலில்... தூத்துக்குடியில் ஆய்வுக் கூட்டம் முடிந்ததும் முதல்வா் அன்றைய தினம் மாலை நாகா்கோவில் வருகிறாா். அன்றிரவு அரசு சுற்றுலா மாளிகையில் தங்கும் அவா், புதன்கிழமை (அக். 14) மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் கரோனா தடுப்புப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்கிறாா். பின்னா், நலத் திட்ட உதவிகள் வழங்குகிறாா்.
முதல்வா் பங்கேற்கும் விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பத்ரிநாராயணன் ஞாயிற்றுக்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், விழா நடைபெறும் ஆட்சியா் அலுவலகத்தில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 1300 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...