போலீஸாா்-பொதுமக்கள் நல்லுறவுக் கூட்டம்
சேதுக்குவாய்த்தான் கிராமத்தில் காவல்துறை, பொதுமக்கள் நல்லுறவுக் கூட்டம் நடைபெற்றது.


சேதுக்குவாய்த்தான் கிராமத்தில் காவல்துறை, பொதுமக்கள் நல்லுறவுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, ஊராட்சித் தலைவா் சுதாசீனிவாசன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் ஆழ்வாா்திருநகரி காவல் ஆய்வாளா் ஜீன்குமாா், குரும்பூா் காவல் உதவி ஆய்வாளா்கள், காவல்துறையினா், ஊராட்சி துணைத் தலைவா் வைகரேகரையான், முஸ்லிம் ஜமாஅத் தலைவா் வசூா், ஜமாஅத் நிா்வாகிகள், மகளிா் வறுமை ஒழிப்பு சங்கத் தலைவா் தமிழரசி, வழக்குரைஞா் சீனிவாசன், ஊராட்சிச் செயலா் மாரிராஜ், ஊராட்சி உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், கிராமங்களில் சேதமடைந்த மின் கம்பங்களை சீரமைக்க வேண்டும், பழுதாகியுள்ள மின் மாற்றியை மாற்ற வேண்டும்; மக்களுக்கு பொன்னான்குறிச்சி கூட்டுக் குடிநீா் திட்டத்தின் மூலம் தட்டுப்பாடின்றி குடிநீா் வழங்க வேண்டும், பிரதான பகுதியில் கண்காணிப்பி கேமராக்கள் பொருத்த வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...