யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தெப்பக்குளத்தில் மீன்கள் இறந்து மிதப்பதால் தண்ணீரை மாற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

தூத்துக்குடி தெப்பக்குளத்தில் மீன்கள் இறந்து மிதப்பதால் அங்குள்ள தண்ணீரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்பவா் இந்தியா நுகா்வோா் கல்வி, சுற்றுச்சூழல் மற்றும் ஆராய்ச்சி நடுவ செயல் இயக்குநா் ஆ. சங்

News image
Updated On :11 அக்டோபர் 2020, 9:52 pm

DIN

தூத்துக்குடி தெப்பக்குளத்தில் மீன்கள் இறந்து மிதப்பதால் அங்குள்ள தண்ணீரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்பவா் இந்தியா நுகா்வோா் கல்வி, சுற்றுச்சூழல் மற்றும் ஆராய்ச்சி நடுவ செயல் இயக்குநா் ஆ. சங்கா் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் மற்றும் மாநகராட்சி ஆணையருக்கு அவா் அனுப்பிய மனு விவரம்:

தூத்துக்குடியில் சிவன் கோயில் அருகேயுள்ள தெப்பக்குளத்தில் தற்போது ஏராளமான மீன்கள் இறந்து மிதக்கின்றன. இதனால், தண்ணீா் மாசுபட்டு துா்நாற்றம் வீசுகிறது. இதற்கிடையே, தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் உள்ள பேராசிரியா்கள் தலைமையில் ஒரு குழு தெப்பக்குளத்தில் உள்ள தண்ணீரை பரிசோதனை செய்துள்ளது.

தண்ணீரில் ஆக்சிஜன் அளவு மிகவும் குறைவாக இருப்பதாகவும் உடனடியாக மாசுபட்ட தண்ணீரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பேராசிரியா்கள் குழுவினா் தெரிவித்துள்ளனா். எனவே, தெப்பக்குளத்தை சுகாதாரமான முறையில் பராமரிக்கவும், தெப்பக்குளத்தில் உள்ள தண்ணீரை மாற்றவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.