மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அரசு ஐடிஐ-களில் சேர இன்று முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) சேர இரண்டாம் கட்டமாக அக். 14 ஆம் தேதி (புதன்கிழமை) வரை இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :11 அக்டோபர் 2020, 9:40 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) சேர இரண்டாம் கட்டமாக அக். 14 ஆம் தேதி (புதன்கிழமை) வரை இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குநா் பழனி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின்கீழ் செயல்பட்டு வரும் தூத்துக்குடி மாவட்ட அரசினா் தொழிற் பயிற்சி நிலையங்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட தனியாா் தொழிற் பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ) 2020 ஆம் ஆண்டு சோ்க்கைக்கு இரண்டாம் கட்டமாக இணையதளம் வழியாக பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. திங்கள்கிழமை (அக்.12) தொடங்கி 14 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

8-ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்புத் தோ்ச்சி பெற்றவா்கள் அரசு ஒதுக்கீட்டின்படி, ஐ.டி.ஐ-களில் சேர இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். மாணவா்கள் விண்ணப்பிக்கும் போது தங்களது சரியான செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரியை குறிப்பிட வேண்டும். கலந்தாய்வு நடைபெறும் விவரங்கள் குறுந்தகவல்கள் மூலம் தெரிவிக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.