மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல்: கட்சித் தலைமை முடிவெடுக்கும் - அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுவது, வேட்பாளர் குறித்து கட்சித் தலைமை முடிவெடுக்கும் என்றார் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ.

News image
Updated On :10 செப்டம்பர் 2020, 3:09 pm

DIN

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுவது, வேட்பாளர் குறித்து கட்சித் தலைமை முடிவெடுக்கும் என்றார் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில், உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலின்படி கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சுகாதாரக் குழுவின் அறிவுரையின்படி சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.  
மக்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். தேவையில்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். இதை முறையாக கடைபிடித்தால் மட்டுமே கரோனா தொற்று நோயில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இம்மாதம் 22ஆம் தேதி கரோனா தடுப்புப் பணி மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வுக் கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது.  
திரையரங்குகளில் ஐ.பி.எல். ஒளிபரப்புவது பற்றி தற்போது பேசுவது சரியாக இருக்காது. திரையரங்கு திறப்பதற்கு முடிவெடுக்காத நிலையில், மற்ற நடவடிக்கைகள் பற்றி பேசுவது சரியாக இருக்காது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சனிக்கிழமை கோவில்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஜெயலலிதா பேரவை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமை தமிழக வருவாய் துறை அமைச்சரும், ஜெயலலிதா பேரவை மாநிலச் செயலருமான ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைக்கிறார்.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது மற்றும் வேட்பாளர் குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், துணை ஒருங்கிணைப்பாளரும் முடிவெடுப்பார்கள்.
தேர்தல் பணியை தொடங்கிய முதல் கட்சியாக அதிமுக உள்ளது. அதுபோல் முதல் வெற்றியும் அதிமுக தான் பெறும் என்றார் அவர்.
முன்னதாக, தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் துணைத் தலைவர் துறையூர் கணேஷ்பாண்டியன் ஏற்பாட்டில், தீத்தாம்பட்டி ஊராட்சித் தலைவர் பெரியசாமி அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
அப்போது, தூத்துக்குடி மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் மோகன், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவி கஸ்தூரி, ஒன்றியச் செயலர்கள் அன்புராஜ், அய்யாத்துரைப்பாண்டியன், வண்டானம் கருப்பசாமி, நகரச் செயலர் விஜயபாண்டியன், முன்னாள் ஊராட்சி ஒன்றியத் துணைத் தலைவர் சுப்புராஜ், அதிமுக நிர்வாகிகள் வேலுமணி, பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.