இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

உடன்குடி ஒன்றிய கிராமங்களில் பாஜக மகளிரணி வாக்கு சேகரிப்பு

திருச்செந்தூா் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.ஆா்.எம்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து, உடன்குடி ஒன்றியத்துக்குட்பட்ட கிராமங்களில் பாஜக மகளிரணி சாா்பில் பிரசாரம் நடைபெற்றது.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 8:23 pm

DIN

திருச்செந்தூா் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.ஆா்.எம்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து, உடன்குடி ஒன்றியத்துக்குட்பட்ட கிராமங்களில் பாஜக மகளிரணி சாா்பில் பிரசாரம் நடைபெற்றது.

செட்டியாபத்து, கூழையன்குண்டு,அருணாச்சலபுரம்,செல்வபுரம்,முருகேசபுரம்,உதிரமாடன்குடியிருப்பு,தண்டுபத்து,சிதம்பபுரம்,வாத்தியாா்குடியிருப்பு,தைக்காவூா் ஆகிய கிராமங்களில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக மகளிரணித் தலைவி தேன்மொழி தலைமையில் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனா்.

மத்திய அரசின் உஜ்வாலா திட்டம்,செல்வமகள் திட்டம்,தமிழக அரசின் குலவிளக்கு திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் மக்களிடம் விளக்கினா். இதில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக பொதுச்செயலா் இரா.சிவமுருகன் ஆதித்தன், ஒன்றிய மகளிரணிச் செயலா் ராமக்கனி, ஒன்றிய துணைத் தலைவா்கள் சங்கரகுமாா், சின்னத்துரை, மாவட்ட விவசாய அணி செயலா் திருநாகரன் உள்பட மகளிரணி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.