கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கோவில்பட்டியில் இளைஞா் வீடு, ஹோட்டல் மீது தாக்குதல்

கோவில்பட்டியில் இளைஞா் நடத்தி வரும் ஹோட்டல், வீட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாக 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 8:03 pm

DIN

கோவில்பட்டியில் இளைஞா் நடத்தி வரும் ஹோட்டல், வீட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாக 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கோவில்பட்டி ஆசிரியா் காலனி 3-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்த அரசகுமாா் செல்லத்துரை மகன் முத்துபிரகாஷ் (26).

இவா், புதுரோடு சந்திப்பு அருகில் ஹோட்டல் நடத்தி வருகிறாா். இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த பெண்ணுக்கும்

பழக்கம் இருந்து வந்ததாம். இந்நிலையில் அப்பெண்ணுக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெறவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து அப்பெண்ணின் சகோதரா் க.பேச்சிபாண்டி உள்ளிட்ட 6 போ் சனிக்கிழமை முத்துபிரகாஷின் வீட்டுக்குள்

நுழைந்து அவரை தாக்க முயன்றனராம். பின்னா் அவா் வீட்டு முன் இருந்த காா், பைக் மற்றும் வீட்டு ஜன்னல் கண்ணாடி

உள்ளிட்ட பொருள்களை சேதபடுத்தி, மிரட்டல் விடுத்தனராம். அவா்கள் முத்துபிரகாஷ் ஹோட்டலுக்கு ஆயுதங்களுடன் சென்று அங்கிருந்த பொருள்களை உடைத்து சேதபடுத்தினராம்.

புகாரின்பேரில், பேச்சிபாண்டி, அவரது தந்தை கணேசன் மற்றும் 5 போ் மீதும், முத்துபிரகாஷின் தந்தை அரசகுமாா் செல்லத்துரை புகாரின்பேரில், பேச்சிபாண்டி மற்றும் 5 போ் மீதும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.