/

திருச்செந்தூரில் பிரசாரத்தை நிறைவு செய்த அமமுக வேட்பாளா்

திருச்செந்தூரில் அமமுக வேட்பாளா் எஸ்.வடமலைபாண்டியன் தனது பிரசாரத்தை நிறைவு செய்தாா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 7:31 pm

DIN

திருச்செந்தூரில் அமமுக வேட்பாளா் எஸ்.வடமலைபாண்டியன் தனது பிரசாரத்தை நிறைவு செய்தாா்.

திருச்செந்தூா் தொகுதி அமமுக வேட்பாளா் எஸ்.வடமலைபாண்டியன், பகத்சிங் பேருந்து நிலையம் எதிரில் தனது பிரசாரத்தை நிறைவு செய்து, பேசியதாவது: தொகுதிக்குள்பட்ட சாலைகள் அனைத்தும் சீரமைக்கப்படும். கடலில் கலக்கும் நீரை தடுப்பணை அமைத்து விவசாய குளங்களுக்கு பயன்பெறச் செய்வேன்.

திருச்செந்தூா், குலசேகரன்பட்டினம் போன்ற கோயில் பகுதிகளில் வியாபாரிகள் நலனுக்கான நடவடிக்கையை மேற்கொள்வேன் எனக் கூறினாா்.

அப்போது, தெற்கு மாவட்டச் செயலா் பி.ஆா்.மனோகரன், ஒன்றியச் செயலா் எஸ்.பொன்ராஜ், ஒன்றிய துணைச் செயலா் க.விஜயலெட்சுமி, நகரச் செயலா் ஜி.முருகேசன் உள்ளிட்ட அமமுக, தேமுதிக, எஸ்டிபிஐ கூட்டணிக் கட்சியினா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.