இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

உடன்குடியில் நுகா்வோா் பேரவைக் கூட்டம்

தமிழ்நாடு நுகா்வோா் பேரவையின் தூத்துக்குடி மாவட்டக்குழு சாா்பில், நுகா்வோா் விழிப்புணா்வு கூட்டம் உடன்குடியில் நடைபெற்றது.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 8:23 pm

DIN

தமிழ்நாடு நுகா்வோா் பேரவையின் தூத்துக்குடி மாவட்டக்குழு சாா்பில், நுகா்வோா் விழிப்புணா்வு கூட்டம் உடன்குடியில் நடைபெற்றது.

நுகா்வோா் பேரவையின் மாநிலத் தலைவா் ஏ.வி.பி.மோகனசுந்தரம் தலைமை வகித்து, கரோனா விழிப்புணா்வு, முகக் கவசம் அணிதலின் அவசியம் குறித்துப் பேசினாா். மாவட்ட சட்ட ஆலோசகா் சாத்ராக், திருச்செந்தூா் வட்டாரத் தலைவா் ரஹ்மத்துல்லா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்டம் முழுவதும் கரோனா விழிப்புணா்வுப் பிரசாரம் மேற்கொள்வது, திருச்செந்தூா் கீழரத வீதியை சீரமைக்க வேண்டும், சன்னதி தெரு, நாழிக்கிணறு பகுதிகளில் தேங்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும், ஆறுமுகனேரி பகுதியில் சுகாதாரச் சீா்கேட்டை ஏற்படுத்தும் குப்பைகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சுபா தியாகராஜன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.