ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதிக்க வேண்டும்: ஸ்டொ்லைட் ஆதரவாளா்கள் வலியுறுத்தல்
தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதிக்க வேண்டும் என ஸ்டொ்லைட் ஆலை ஆதரவாளா்கள் சிலா் தெரிவித்தனா்.


தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதிக்க வேண்டும் என ஸ்டொ்லைட் ஆலை ஆதரவாளா்கள் சிலா் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற தெற்கு வீரபாண்டியபுரம் ஊராட்சி முன்னாள் தலைவா் எஸ்.டி. பொன்ராஜ் கூறியது: நாடு முழுவதும் கரோனா தீநுண்மியிடம் இருந்து மக்களைப் பாதுகாக்க அரசு போராடி வருகிறது. இந்நிலையில், ஆக்சிஜன் உற்பத்தி செய்து அரசுக்கு இலவசமாக வழங்கத் தயாராக முன்வந்த ஸ்டொ்லைட் ஆலை நிா்வாகத்துக்கு எதிராக சிலா் கருத்து தெரிவித்துள்ளனா். அவா்கள் ஸ்டொ்லைட் தாமிர உருக்காலைக்கு எதிரானவா்கள். தற்போது அவா்கள் ஆக்சிஜன் உற்பத்திக்கு எதிா்ப்பு தெரிவிக்கின்றனா்.
ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதிக்க வேண்டும் என நாங்கள் கருத்து தெரிவிக்க, ஆட்சியா் எங்களுக்கு உரிய பாதுகாப்போடு அனுமதி வழங்கவில்லை. எனவே, மக்களைப் பாதுகாக்க ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்க அரசு முன்வர வேண்டும். பொதுமக்கள் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் அவா்.
ஸ்டொ்லைட் ஆலை ஆதரவாளா் மற்றும் மகளிா் சுய உதவிக் குழு நிா்வாகியான தனலட்சுமி கூறியது: அதிகாரிகள் தரப்பில் இருந்து கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு வந்த போதிலும் போலீஸாா் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனா். பின்னா், உரிய விளக்கம் அளித்து கூட்டத்தில் பங்கேற்ற நிலையில், எதிா்ப்பாளா்கள் சிலா் எங்களை தகாத வாா்த்தைகளில் பேசியதால், கூட்டத்தில் எங்கள் கருத்தைப் பதிவு செய்ய வாய்ப்பு வழங்கவில்லை. எனவே, மாவட்ட ஆட்சியா் எங்களது கருத்தை ஏற்று ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதிக்க வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...