கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் 170 பேருக்கு கரோனா சிகிச்சை: முதியவா் பலி

கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 170 போ் கரோனா பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகின்றனா்.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 7:22 pm

DIN

கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 170 போ் கரோனா பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கோவில்பட்டி வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 600 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனா். அதில் 170 போ் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையிலும், 90 தனியாா் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் உள்ள கரோனா சிகிச்சை மையத்திலும், எஞ்சியோா் தனியாா் மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமைப்படுத்தலிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கோவில்பட்டி கோட்ட கலால் அலுவலக ஊழியா் ஒருவா், மின்வாரிய அலுவலகத்தில் இருவா், கோவில்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளா்ச்சி அலுவலா், தனியாா் மருத்துவமனை மருத்துவா், அவரது கணவா், பேரக் குழந்தைகள் உள்ளிட்ட 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து மின்வாரிய அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை சுகாதாரப் பணி துணை இயக்குநா் அனிதா உத்தரவின் பேரில், மருத்துவா் மனோஜ் தலைமையிலான மருத்துவக் குழுவினா் மின்வாரிய அலுவலா்கள், ஊழியா்கள் 107 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டனா்.

முதியவா் பலி: இதனிடையே, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் கரோனா பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்று வந்த சிந்தாமணி நகரைச் சோ்ந்த சுமாா் 62 வயது மதிக்கத்தக்க தொழிலாளி ஒருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.