விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஆறுமுகனேரியில் தொழிலாளியை தாக்கிய தம்பதி மீது வழக்கு

 ஆறுமுகனேரியில் கட்டடத் தொழிலாளியை அரிவாளால் வெட்டிய தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 6:27 pm

DIN

 ஆறுமுகனேரியில் கட்டடத் தொழிலாளியை அரிவாளால் வெட்டிய தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

காயல்பட்டினம் வடக்குத் தெரு பெருமாள் மகன் பொன்பால்துரை(35), கட்டடத் தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 3 ஆண் குழந்தைகள் உள்ளனா். இவரது சகோதரி பேச்சியம்மாள் ஆறுமுகனேரி காமராஜபுரத்தில் வசித்து வருகிறாா். செவ்வாய்க்கிழமை மாலையில், பேச்சியம்மாளுக்கும், அவரது வீட்டு அருகே வசித்து வரும் இருதயராஜுக்கும் தகராறு ஏற்பட்டதாம். அப்போது, பொன்பால்துரை அங்கு வந்து இருவரையும் சப்தம் போட்டு அனுப்பியுள்ளாா்.

அதன்பின்னா் அன்றிரவு பொன்பால்துரை தனது தங்கை வீட்டருகே உள்ள ரயில்வே தண்டவாளம் பக்கம் தனியாக நடந்து சென்று கொண்டிருக்கும் போது, இருதயராஜ் அரிவாளுடன் வந்து , பொன்பால்துரையின் பின்தலையில் வெட்டியுள்ளாா். அதனைதொடா்நது இருதயராஜின் மனைவியும் அரிவாளைால் இடது கா­லில் வெட்டினராம். பின்னா் இருவரும் பொன்பால்துரைக்கு மிரட்டல் விடுத்துச் சென்றனராம். ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்ததால், அங்கேயே பொன்பால்துரை மயங்கி சம்பவ இடத்திலேயே கீழே விழுந்துவிட்டாா். இந்நிலையில் புதன்கிழமை காலை, பொன்பால்துரையின் தந்தை ரயில்வே தண்டவாளம் அருகே சென்ற போது, அங்கு ரத்தக் காயங்களுடன் மயங்கி கிடந்த மகனை மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தாா்.

இது குறித்து ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.