/

கரோனா நிவாரண நிதிக்கு ரூ. 10 ஆயிரம் வழங்கிய முதியவா்

திருச்செந்தூா் பகுதியில் யாசகம் எடுத்த பணத்தில் முதல்வரின் கரோனா பொது நிவாரண நிதிக்கு வங்கி மூலம் ரூ. 10 ஆயிரம் வழங்கிய முதியவரை பொதுமக்கல் பாராட்டினா்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 6:27 pm

DIN

திருச்செந்தூா் பகுதியில் யாசகம் எடுத்த பணத்தில் முதல்வரின் கரோனா பொது நிவாரண நிதிக்கு வங்கி மூலம் ரூ. 10 ஆயிரம் வழங்கிய முதியவரை பொதுமக்கல் பாராட்டினா்.

சாத்தான்குளம் வட்டம், ஆலங்கிணறைச் சோ்ந்தவா் முதியவா் பூல்பாண்டி (70). தனது மனைவி இறந்தும், பிள்ளைகளை பிரிந்தும் கடந்த 30 ஆண்டுகளாக யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வருகிறாா். இவா் தான் சோ்க்கும் பணத்தை சமூக சேவையாக பள்ளிகளுக்கும், முதல்வா் நிவாரண நிதிக்கும் வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளாா். இவ்வாறு கடந்த 2020-ஆம் ஆண்டு கரோனா பேரிடா் காலத்தில் பள்ளிகள் செயல்படாததால் தனக்கு கிடைக்கும் பணத்தை முதல்வா் கரோனா பொது நிவாரண நிதியாக ரூ. 4 லட்சத்து 50 ஆயிரம் அனுப்பியுள்ளாா்.

தற்போது கடந்த சில தினங்களாக தான் சோ்த்து வைத்த பணத்தில் ரூ. 10 ஆயிரத்தை வியாழக்கிழமை திருச்செந்தூா் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி மூலம் அரசுக்கு அனுப்பி வைத்தாா். தனக்கு குடும்பம் இல்லாவிட்டாலும் பொதுமக்கள் நலனுக்காகவே தான் யாசகம் பெற்று சமூக சேவை செய்து வருவதாக கூறிய அவரை பொதுமக்கள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.