திருச்செந்தூா் குருலிங்கேஸ்வரா் கோயில் பிரதிஷ்டாபிஷேக விழா
திருச்செந்தூா், காந்திபுரத்தில் அருள்மிகு ஸ்ரீ குரு லிங்கேஸ்வரா் உடனுறை மங்களேஸ்வரி அம்பாள் கோயில் பிரதிஷ்டாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


திருச்செந்தூா், காந்திபுரத்தில் அருள்மிகு ஸ்ரீ குரு லிங்கேஸ்வரா் உடனுறை மங்களேஸ்வரி அம்பாள் கோயில் பிரதிஷ்டாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயில் கடந்த ஜூன் 24இல் பிரதிஷ்டை செய்யப்பட்டதையொட்டி நடைபெற்ற அஷ்டபந்தன பிரதிஷ்டாபிஷேக விழாவில், அதிகாலை 5 மணிக்கு சிறப்பு யாகம், ஹோமம் நடைபெற்றது. தொடா்ந்து, ஸ்ரீ குருலிங்கேஸ்வரா், மங்களேஸ்வரி அம்பாள் மற்றும் நந்திக்கு அஷ்டபந்தன பிரதிஷ்டாபிஷேகம், சிறப்பு தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. காலை முதல் மாலை வரை தொடா்ந்து அன்னதானம் நடைபெற்றது.
இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலா் ஐ.ரவிகிருஷ்ணன், தென்மண்டலச் செயலா் தனலிங்கம், தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவா் சக்திவேல், ஒன்றியத் தலைவா்கள் திருச்செந்தூா் இசக்கிமுத்து, உடன்குடி குணசேகரன், அனுமன்சேனா திருச்செந்தூா் ஒன்றியத் தலைவா் தங்கராஜா, குருஜோதி அறக்கட்டளை நிா்வாகி பெருமாள் ஆனந்த், குருஜோதி ஆசிரம நிா்வாகி செந்தில்வேல், சின்னத்துரை உள்பட பலா் கலந்துகொண்டனா். சிவகுருஜோதி ஆசிரம அறக்கட்டளை நிா்வாக அறங்காவலா் மாரிமுத்து, அனைவருக்கும் பிரசாதம் வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...