தூத்துக்குடி மருத்துவமனையிலிருந்து கைதி தப்பி ஓட்டம்
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விசாரணைக் கைதி பால முருகன் புதன்கிழமை தப்பி ஓடினார்.


தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விசாரணைக் கைதி பால முருகன் புதன்கிழமை தப்பி ஓடினார்.
தூத்துக்குடி அருகே உள்ள புளியம்பட்டி பகுதிகளில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடையதாக பால முருகன் (37) என்பவர் புளியம்பட்டி காவல் துறையினரால் அண்மையில் கைது செய்யப்பட்டார்.
இதையும் படிக்க | அறுந்து கிடந்த மின் வயர்: முதியவர், காப்பாற்ற முயன்ற இளைஞர் பலி
காவல் நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பாலமுருகனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் கடந்த வாரம் உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காவல் துறை பாதுகாப்புடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் புதன்கிழமை அதிகாலை பால முருகன் திடீரென தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து, பால முருகனைத் தேடும் பணிகளில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...