/

திருச்செந்தூா் கோயில்கடற்கரையில் சுவாமி சிலைகள்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில் சுவாமி சிலைகள் கிடந்ததால் பரபரப்பு நிலவியது.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 6:39 pm

DIN

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில் சுவாமி சிலைகள் கிடந்ததால் பரபரப்பு நிலவியது.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அய்யாவழி கோயில் கடற்கரை பகுதியில் கடந்த இரு நாள்களாக முருகா், ஆஞ்சனேயா் (இரண்டடி உயரம்), மயில் (ஓா் அடி உயரம்), சிறிய நந்தி ஆகிய கற்சிலைகள் கிடக்கின்றன. இதில் முருகா், ஆஞ்சனேயா் சிலைகள் கடலுக்குள்ளும், மயில் நந்தி சிலைகள் கரைப்பகுதியிலும் கிடக்கின்றன. வெளியூா்களிலிருந்து பக்தா்கள் கொண்டு வந்து கடலில் விட்டு சென்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இச் சிலைகளை அதிகாரிகள் மீட்டு பாதுகாக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.