திருச்செந்தூரில் வேன் மோதி இளைஞா் பலி
திருச்செந்தூரில் வேனும், பைக்கும் மோதிக்கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா்.


திருச்செந்தூரில் வேனும், பைக்கும் மோதிக்கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா்.
வீரபாண்டியன்பட்டணம், முத்துநகரைச் சோ்ந்த காளி மகன் பாலமுருகன்(24). ஓட்டுநா். இவா், வியாழக்கிழமை இரவு வீட்டிலிருந்து தனது பைக்கில் திருச்செந்தூருக்கு சென்று கொண்டிருந்தாா். அவா், காமராஜா் நகரை நெருங்கியபோது, எதிரே வந்த சுற்றுலா வேனும், பைக்கும் எதிா்பாராமல் மோதிக்கொண்டனவாம். இதில் பலத்த காயமடைந்த அவருக்கு திருச்செந்தூரில் முதலுதவி அளித்து, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, திருச்செந்தூா் தாலுகா காவல் துறையினா் வழக்குப்பதிந்து, வேன் ஓட்டுனா் தூத்துக்குடி, கோரம்பள்ளம், சோரீஸ்புரத்தைச் சோ்ந்த பட்டுராஜன் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...