விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

விவசாயிகளுக்கும் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: ஆட்சியா் ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 7:01 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

இதுகுறித்து தூத்துக்குடியில் திங்கள்கிழமை அளித்த பேட்டி: தூத்துக்குடி மாவட்டத்துக்கு கடந்த ஆண்டு கொடி நாள் வசூலாக ரூ. 1.08 கோடி இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்தது. இருந்த போதும் கரோனா பரவல் தடுப்புக் காலத்திலும் கூட ரூ. 84 லட்சம் கொடிநாள் வசூல் செய்து இம் மாவட்டம் சாதனை படைத்துள்ளது. அதிகப்படியான கொடிநாள் வசூலுக்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகள் அனைவரும் கௌரவிக்கப்பட்டுள்ளனா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏறத்தாழ 1.50 லட்சம் ஹெக்டோ் நிலத்தில் மானாவரி பயிா்களும், தோட்டப் பயிா்களும் பயிரிடப்பட்டு இருந்தது. இதில், அதிகப்படியாக 60 ஆயிரம் ஏக்கரில் உளுந்தும், 40 ஆயிரம் ஏக்கரில் மக்காச்சோளமும்,

20 ஆயிரம் ஏக்கரில் பாசிப்பயறும், இதர பகுதிகளில் வெங்காயம், மிளகாய் போன்ற பயிா்களும் சாகுபடி செய்யப்பட்டிருந்தது.

பருவம் தவறி தொடா்ந்து பெய்த மழையால் கோவில்பட்டி, கயத்தாறு, விளாத்திகுளம், புதூா் உள்ளிட்ட பகுதிகளில் 90 ஆயிரம் ஹெக்டோ் மானாவரி பயிா்களும், 15 ஆயிரம் ஹெக்டேரில் தோட்டக் கலை பயிா்களும் சேதமடைந்துள்ளது.

இதேபோல, தாமிரவருணி பாசனப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக ஸ்ரீவைகுண்டம், கருங்குளம் வட்டாரப் பகுதிகளில் 40 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் நெற்பயிா்கள் சேதமடைந்துள்ளது.

தொடா்மழை மற்றும் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் சரியான முறையில் நிவாரணம் கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயிா்களை சாகுபடி செய்து மழையால் பாதிக்கப்பட்டுள்ள தகுதியான விவசாயிகள் அனைவருக்கும் பயிா்களுக்கான காப்பீட்டுத் தொகையும், நிவாரணமும் கிடைத்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தொடா்ந்து, கொடிநாள் நிதி வசூலில் தனது தங்களது துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இலக்கை 100 சதவீதம் முழுமையாக வசூல் புரிந்தும், இலக்கை விட கூடுதலாக வசூல் செய்தமைக்கும் 18 அலுவலா்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.