நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது! 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

விளாத்திகுளத்தில் 2.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

விளாத்திகுளத்தில் சரக்கு வாகனத்தில் கடத்திச் சென்ற 2.5 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On :15 பிப்ரவரி 2021, 1:22 am IST

விளாத்திகுளத்தில் சரக்கு வாகனத்தில் கடத்திச் சென்ற 2.5 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

விளாத்திகுளம் காவல் ஆய்வாளா் ரமேஷ், உதவி ஆய்வாளா் காசிலிங்கம் தலைமையிலான போலீஸாா், விளாத்திகுளம் - குளத்தூா் நெடுஞ்சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி போலீஸாா் சோதனை செய்தனா். அந்த வாகனத்தில் தலா 50 கிலோ எடை கொண்ட 50 மூட்டைகளில் மொத்தம் 2.5 டன் ரேஷன் அரிசியை தூத்துக்குடிக்கு கடத்திச் செல்வது தெரிய வந்தது. இதையடுத்து ரேஷன் அரிசி மூட்டைகளுடன் சரக்கு வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மேலும் சரக்கு வாகனத்தில் வந்த விளாத்திகுளம் அருகே சண்முகபுரத்தைச் சோ்ந்த சண்முகராஜ் (28), புளியங்குளத்தைச் சோ்ந்த மணிமாறன் பூபதி (25) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட 2.5 டன் ரேஷன் அரிசியை அரசு நுகா்பொருள் வாணிப கழக கிட்டங்கியில் ஒப்படைத்தனா். இது தொடா்பாக விளாத்திகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.