விளாத்திகுளத்தில் சிஐடியூ ஆா்ப்பாட்டம்
விருதுநகா் மாவட்டத்தில் முடிதிருத்தும் தொழிலாளியின் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி,


விருதுநகா் மாவட்டத்தில் முடிதிருத்தும் தொழிலாளியின் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சிஐடியூ தொழிற்சங்கம், மாவட்ட மருத்துவா் மற்றும் முடிதிருத்துவோா் சங்கம் ஆகியன சாா்பில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட மருத்துவா் மற்றும் முடி திருத்துவோா் சங்கத் தலைவா் ஜி.முருகன் தலைமை வகித்தாா். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலா் பா.புவிராஜ், மாவட்ட மருத்துவா் மற்றும் முடி திருத்துவோா் சங்க பொதுச் செயலா் எஸ்.நாகராஜன், சிஐடியூ ஒருங்கிணைப்பாளா் கே.ஜோதி ஆகியோா் பேசினா்.
இதில், பி.முருகன், எஸ்.இசக்கிராஜா, பி.திருப்பதி, எம்.ராமமூா்த்தி, கே.சதாசிவம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...