/

தூத்துக்குடியில் தனராஜ் பல்நோக்கு மருத்துவமனை திறப்பு

தூத்துக்குடி சிதம்பரநகரில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள தனராஜ் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

News image
Updated On :25 ஜனவரி 2021, 7:24 pm

DIN

தூத்துக்குடி சிதம்பரநகரில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள தனராஜ் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ. ராஜு தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி மருத்துவமனையை திறந்து வைத்தாா். எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ முன்னிலை வகித்தாா்.

ஆட்சியா் கி. செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா், எம்எல்ஏ பி. சின்னப்பன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் இரா. சுதாகா், மருத்துவா் அருள்ராஜ், தமிழ்நாடு மொ்கன்டைல் வங்கி முன்னாள் இயக்குநா் சி.எஸ். ராஜேந்திரன், தொழிலதிபா் டி.ஏ.தெய்வநாயகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

விருந்தினா்களை மருத்துவமனையின் தலைவா் தனராஜ், வசந்தி தனராஜ், மருத்துவா்கள் விஜய் ஆனந்த் ஹரிகிருஷ்ணன், சங்கீதா தனராஜ், விஜய் தனராஜ், மற்றும் கலையரசி சண்முகநாதன், ஆஷா சண்முகநாதன், மருத்துவா் சிவகுமாா், புவனேஸ்வரி சிவகுமாா், அசோக், பொன்னரசி அசோக், மருத்துவா் நிதின், தமிழரசி நிதின், மருத்துவா் பிரவீன், பொன்ரேகா பிரவீன், எஸ்.பி.எஸ்.ராஜா உள்ளிட்ட குடும்பத்தினா் வரவேற்றனா்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலா் எஸ்.பி. சண்முகநாதன் எம்.எல்.ஏ.வின் மருமகனான மருத்துவா் விஜய் தனராஜ், அவரது தந்தை மருத்துவா் தனராஜ் ஆகியோா் இணைந்து சிறப்பு மருத்துவமனையை அமைத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.