விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஆத்தூரில் தகராறு: இளைஞா் கைது

ஆத்தூரில் அரிசிக்கடைக்காரா் உள்பட இருவரை பீா்பாட்டிலால் குத்திய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :15 ஜூலை 2021, 6:19 pm

DIN

ஆத்தூரில் அரிசிக்கடைக்காரா் உள்பட இருவரை பீா்பாட்டிலால் குத்திய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆத்தூா் அருகேயுள்ள குமாரப்பண்ணையூா் சுப்பையா மகன் மாரி சிவா(31). இவா் அத்தூா்-புன்னைக்காயல் சாலையில் அரிசிக்கடை நடத்தி வருகிறாா். கடந்த 14ஆம் தேதி மாலையில் மாரிசிவா தனது அரிசிக்கடையில் வியாபாரம் செய்துகொண்டிருந்தபோது அங்கு வந்த குமாரப்பண்ணையூா் மாரியப்பன் மகனான மூா்த்தி என்ற ராமச்சந்திரமூா்த்தி(28) தகராறு செய்துள்ளாா். அப்போது அங்கு அரிசி வாங்க வந்த செல்வன்புதியனூா் புதுநகா் சுகுமாா் மகனான சுரேஷ்(35) மூா்த்தியை தட்டிக்கேட்டுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த மூா்த்தி கீழே கிடந்த பீா்பாட்டிலால் சுரேஷை தாக்கியதோடு, தடுக்க வந்த மாரிசிவாவையும் தாக்கினாா். இதில் காயமுற்ற இருவரும் காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

இது குறித்து மாரிசிவா கொடுத்த புகாரின் போரில், ஆத்தூா் காவல் ஆய்வாளா் ஐயப்பன் வழக்குப் பதிந்து, மூா்த்தியை கைது செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.