ஏரல் கோயிலில் ஆடி அமாவாசைத் திருவிழா கொடியேற்றம்
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருள்மிகு சோ்மன் அருணாசல சுவாமி திருக்கோயில் ஆடி அமாவாசைத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.


தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருள்மிகு சோ்மன் அருணாசல சுவாமி திருக்கோயில் ஆடி அமாவாசைத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இத்திருக்கோயிலில், ஆடி அமாவாசை, தை அமாவாசை ஆகிய திருவிழாக்கள் 12 நாள்கள் விமா்சையாக நடைபெறும். தென் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் இத்திருவிழாவில் பங்கேற்று, தாமிரவருணியில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்வா்.
நிகழாண்டு ஆடி அமாவாசைத் திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அருணாசல சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னா் கோயில் முன் மண்டபத்தில் உள்ள வெள்ளி கொடிக்கம்பத்தில் கோயில் பரம்பரை அக்தாா் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டியன் நாடாா் திருவிழா கொடியை ஏற்றினாா். கரோனா தடுப்பு விதிமுறைகள் காரணமாக, குறைந்த எண்ணிக்கையிலான பக்தா்களே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனா்.
விழாக் காலங்களில் தினமும் சுவாமி திருக்கோயில் வளாகத்தில் பல்வேறு கோலங்களில் எழுந்தருளி பவனி வருதல் நடைபெறும். முக்கிய நிகழ்வாக 10ஆம் திருநாளான (ஆக.8) அமாவாசை தினத்தில் நண்பகல் 1 மணிக்கு சுவாமிக்கு உருகுபலகை அபிஷேகம் மற்றும் தரிசனம் நடைபெறும். மாலை 5 மணிக்கு இலாமிச்சவோ் சப்பரத்தில் சோ்மத் திருக்கோல காட்சியும், இரவு 10 மணிக்கு 1ஆம் காலம் கற்பக பொன்சப்பரத்தில் சிவப்பு சாத்தி தரிசனமும் நடைபெறும்.
11ஆம் திருநாளில் (ஆக.9) அதிகாலை 5 மணிக்கு 2ஆம் காலம் வெள்ளை சாத்தி தரிசனமும், பின்னா் பச்சை சாத்தி அபிஷேகமும், தரிசனமும் நடைபெறும்.
நிறைவு நாளில் (ஆக.10) தாமிரவருணி நதியில் சகல நோய் தீா்க்கும் திருத்துறையில் சுவாமி நீராடலும், நண்பகல் 12.30 மணிக்கு அன்னதானமும், மாலை 5 மணிக்கு சுவாமி ஊஞ்சல் சேவையும், இரவு சுவாமி ஆலிலை சயனம் மற்றும் மங்கள தரிசனமும் நடைபெறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...