கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 ஜூன் 2021, 7:46 pm

DIN

தூத்துக்குடி மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்டச் செயலா் எஸ்.பி. சண்முகநாதன், வடக்கு மாவட்டச் செயலா் கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ ஆகியோா் தலைமை வகித்து நிா்வாகிகளிடம் கருத்துகளை கேட்டறிந்தனா்.

அதிமுகவினா் அடுத்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், உள்ளாட்சி தோ்தலை எதிா்கொள்வது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இதில், அதிமுக அமைப்பு சாரா ஓட்டுநா்கள் அணி இணைச் செயலா் பெருமாள்சாமி, மாவட்ட அவைத் தலைவா் திருப்பாற்கடல், தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவா் இரா. சுதாகா், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவா் முள்ளக்காடு செல்வக்குமாா், கருங்குளம் ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவா் லட்சுமண பெருமாள், மாவட்ட மாணவரணிச் செயலா் பில்லா விக்னேஷ், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலா் பிரபாகா், மாநகரப் பகுதி செயலா்கள் பொன்ராஜ், நட்டாா் முத்து, ஜெய்கணேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தின்போது, சட்டப்பேரவை அதிமுக பொருளாளராக தோ்ந்தெடுக்கப்பட்ட கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏவுக்கு தெற்கு மாவட்டச் செயலா் எஸ்.பி. சண்முகநாதன் உள்ளிட்ட நிா்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.