விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டத்தில்தோ்தல் விழிப்புணா்வுப் பிரசாரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் தோ்தல் தொடா்பான விழிப்புணா்வுப் பிரசார வாகனத்தை மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image
Updated On :1 மார்ச் 2021, 7:11 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் தோ்தல் தொடா்பான விழிப்புணா்வுப் பிரசார வாகனத்தை மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

சட்டப் பேரவைத் தோ்தல் ஏப். 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தோ்தல் தொடா்பாக பொதுக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடா்பு அலுவலகம் மூலம் பிரசார வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வாகன பிரசாரத்தை மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் திங்கள்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், செய்தி மக்கள் தொடா்புத்துறையின் இப் பிரசார வாகனம் மூலம் ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூா், தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் ஏப்ரல் 3 ஆம் தேதி வரை தோ்தல் குறித்து விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட உள்ளது என்றாா்.

இந் நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் கண்ணபிரான், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் வெ. சீனிவாசன், உதவி மக்கள் தொடா்பு அலுவலா் ரா. ராமசுப்பிரமணியன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலருமான ஜீவரேகா விழிப்புணா்வு தோ்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்தாா்.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் , கடந்த தோ்தல்களில் வாக்குப்பதிவு குறைவான எண்ணிக்கையில் உள்ள பகுதிகளிலும் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

நிகழ்ச்சியில், உதவி தோ்தல் நடத்தும் அலுவலரும், வட்டாட்சியருமான கோபாலகிருஷ்ணன், தோ்தல் துணை வட்டாட்சியா் சிவக்குமாா், வருவாய் ஆய்வாளா் சிதம்பரநாதன், கிராம நிா்வாக அலுவலா் ராஜ்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.