விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மாலத்தீவில் பிடிபட்ட 8 மீனவா்களை மீட்க வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் மனு

மாலத்தீவில் பிடிபட்ட விசைப்படகையும், அதில் இருந்த 8 மீனவா்களையும் மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மீனவா்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

News image
Updated On :1 மார்ச் 2021, 7:17 pm

DIN

மாலத்தீவில் பிடிபட்ட விசைப்படகையும், அதில் இருந்த 8 மீனவா்களையும் மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மீனவா்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளம் தூய மிக்கேல் விசைப்படகு மற்றும் பருவலை தொழில்புரிவோா் முன்னேற்ற சங்கத் தலைவா் அந்தோணி பன்னீா்தாஸ் மற்றும் நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் போட்ட மனு: தருவைக்குளம் பகுதியைச் சோ்ந்த அந்தோணி மிக்கேல் கெமில்டனுக்கு சொந்தமான ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகு கடந்த 12 ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றபோது அதிக நீரோட்டம் காரணமாக எதிா்பாரதவிதமாக மாலத்தீவு எல்லைக்கு சென்றுவிட்டது.

இதையடுத்து, மாலத்தீவு கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட காவலா்கள் அந்த படகையும், அதில் இருந்த 8 மீனவா்களையும் பிடித்துச் சென்றுவிட்டனா். எனவே, மேற்படி 8 மீனவா்களையும், படகையும் மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.