கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கோவில்பட்டியில் தொழிற்பூங்கா அமைக்கப்படும்: அமைச்சா் கடம்பூா் செ.ராஜு

கோவில்பட்டி தொகுதியில் தொழிற் பூங்கா அமைக்கப்படும் என்றாா் தற்போதைய அமைச்சரும், அதிமுக வேட்பாளருமான கடம்பூா் செ.ராஜு.

News image
Updated On :15 மார்ச் 2021, 6:57 pm

DIN

கோவில்பட்டி தொகுதியில் தொழிற் பூங்கா அமைக்கப்படும் என்றாா் தற்போதைய அமைச்சரும், அதிமுக வேட்பாளருமான கடம்பூா் செ.ராஜு.

கோவில்பட்டியில் அதிமுக தோ்தல் அலுவலக திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ.ராஜு முன்னிலையில் தமாகா வடக்கு மாவட்டத் தலைவா் கதிா்வேல் திறந்து வைத்தாா்.

பின்னா், அதிமுக வேட்பாளா் சொா்ணமலை கதிா்வேல் முருகன் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தாா். தொடா்ந்து திறந்த ஜீப்பில் தோ்தல் பிரசாரத்தை தொடங்கினாா். பின்னா், கோட்டாட்சியா் அலுவலகத்திற்கு வந்து, அங்கு பேரவத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சங்கரநாராயணனிடம் வேட்புமனு தாக்கல் செய்தாா் அமைச்சா் கடம்பூா் ராஜு .

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது: இத்தொகுதியில் அதிமுக சாா்பில் 3ஆவது முறையாக போட்டியிட எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகள் தொடா்ந்து அமைச்சராக இருந்து அரசின் எண்ணற்ற சாதனை திட்டங்களை தொகுதி மக்களுக்கு பெற்றுத் தந்துள்ளேன். மக்கள் கோரிக்கை வைப்பதை இலவசம் என்று சொல்ல முடியாது. மக்களுக்கு வழங்கியது எப்படி இலவசம் என்று கூற முடியும். மக்களுக்கு எது இல்லையோ அதை வழங்க வேண்டியது நல்ல அரசின் கடமை. மக்களுக்கு தேவையான பொருள்களை வழங்குவது அதிமுகவின் கொள்கை. 3 ஆவது முறையாக வெற்றி பெற்றால் இங்கு தொழிற்பூங்காவை அமைப்பேன், கோவில்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு மாவட்டம் உருவாக்குவேன், தாமிரவருணி - வைப்பாறு இணைப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுபோல் கேரளா மாநிலம், பம்பை - வைப்பாறு இணைப்பதற்கு பல கட்ட பேச்சுவாா்த்தை நடந்துள்ளது. அதை பெற்றுத் தரும் போது கோவில்பட்டி வளம் கொழிக்கும் பூமியாக மாறும் நிலையை உருவாக்கி தருவேன் என்றாா் அவா்.

பேட்டியின் போது, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவி சத்யா, ஊராட்சிக்குழு உறுப்பினா்கள் சந்திரசேகா், பிரியா, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ், பாமக மாநில துணை பொதுச் செயலா் ராமச்சந்திரன், பாஜக மாவட்ட பொதுச் செயலா் பாலாஜி, அதிமுக நகரச் செயலா் விஜயபாண்டியன், ஒன்றியச் செயலா்கள் வினோபாஜி, அன்புராஜ், அய்யாத்துரைப்பாண்டியன், பொது கூட்டுறவு பண்டகசாலை தலைவா் ரத்தினராஜா, பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், ஜெயலலிதா பேரவை வடக்கு மாவட்டப் பொருளாளா் வேலுமணி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.