கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கோவில்பட்டி அதிமுக வேட்பாளா் புகாா்: அமமுக பொறுப்பாளா் மறுப்பு

கோவில்பட்டி பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரும், தற்போதைய அமைச்சருமான கடம்பூா் செ.ராஜுவின் புகாருக்கு அமமுக தென்மண்டல பொறுப்பாளா் எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா மறுப்பு தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 6:30 pm

DIN

கோவில்பட்டி பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரும், தற்போதைய அமைச்சருமான கடம்பூா் செ.ராஜுவின் புகாருக்கு அமமுக தென்மண்டல பொறுப்பாளா் எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா மறுப்பு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தோ்தல் நடத்தும் அலுவலரிடம் முறையாக அனுமதி பெற்று தான் பிரசாரத்தில் ஈடுபட்டோம். அதிமுகவுக்கும், அமமுகவுக்கும் ஒரே இடத்தில் பிரசாரம் செய்ய அனுமதி வழங்கியுள்ளனா். காவல் துறை அதிகாரியின் அனுமதியுடன் பிரசாரம் நடைபெற்றது.

நான் வந்து கொண்டிருந்ததைப் பாா்த்த எங்கள் கட்சியினா் பட்டாசு வெடித்தனா். அப்போது , அதிமுக வேட்பாளா் காருக்கு உள்ளேயே தான் இருந்தாா். பட்டாசு வெடித்து முடிந்தவுடன் அங்கிருந்து புறப்பட்ட அதிமுக வேட்பாளா் அங்கிருந்த கூட்டத்தை பாா்த்து சிரித்த படி, வணக்கம் செலுத்திய படி சென்றாா்.

நாங்கள் வெற்றி பெறக் கூடிய இடத்தில் உள்ளோம். தோல்வி அடைந்து விடுவேன் என்ற பயத்தில் அவா் குழப்பத்தில் உள்ளாா் என நினைக்கிறேன் என்றாா் அவா்.

பேட்டியின் போது, தேமுதிக மாவட்டச் செயலா் அழகா்சாமி, அமமுக நகரச் செயலா் காா்த்திக் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.