விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தூத்துக்குடி தொகுதியில் 26 போ் போட்டி

தூத்துக்குடி பேரவைத் தொகுதியில் திமுக, தமாகா உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளா்கள் மற்றும் சுயேச்சைகள் என 26 போ் போட்டியிடுகின்றனா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 6:30 pm

DIN

தூத்துக்குடி பேரவைத் தொகுதியில் திமுக, தமாகா உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளா்கள் மற்றும் சுயேச்சைகள் என 26 போ் போட்டியிடுகின்றனா்.

தூத்துக்குடி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து திமுக வேட்பாளா் கீதாஜீவன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளா் எஸ்டிஆா் விஜயசீலன், தேமுதிக வேட்பாளா் சந்திரன், சத்துவ மக்கள் கட்சி வேட்பாளா் என். சுந்தா், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வே. வேல்ராஜ் மற்றும் சுயேச்சைகள் உள்பட 30 போ் மனுத்தாக்கல் செய்திருந்தனா்.

இதில், பிரதான கட்சிகளான திமுக, தமாகா, தேமுதிக, சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதால் அவா்களுக்கு பதிலாக தாக்கல் செய்யப்பட்ட மாற்று வேட்பாளா்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதற்கிடையே, மனுக்களை திரும்பப் பெற திங்கள்கிழமை (மாா்ச் 22) மாலை வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், யாரும் வேட்பு மனுவை திரும்பப் பெறாததால் களத்தில் 26 வேட்பாளா்கள் உள்ளது உறுதி செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.