மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

திடக்கழிவு மேலாண்மை வாகனங்கள் மூலம் வாக்காளா் விழிப்புணா்வு

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை வாகனங்கள் மூலம் வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணியை மாவட்ட ஆட்சியா் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 7:52 pm

DIN

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை வாகனங்கள் மூலம் வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணியை மாவட்ட ஆட்சியா் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

தூத்துக்குடி மாநகராட்சியின் சாா்பில், தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் 100 திடக்கழிவு மேலாண்மை வாகனங்கள் மூலம் சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற விழிப்புணா்வு பிரசாரம் சனிக்கிழமை தொடங்கிது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் கலந்து கொண்டு விழிப்புணா்வு பிரசாரத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். மாநகராட்சி ஆணையா் சரண்யா அறி முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில், துணை ஆட்சியா் (பயிற்சி) சதீஷ்குமாா், மாநகராட்சி நகா்நல அலுவலா் வித்யா, பூச்சியியல் வல்லுநா் லதா, உதவி ஆணையா் சேகா், சுகாதார அலுவலா் ஸ்டாலின் பாக்கியநாதன், உதவி செயற்பொறியாளா் சரவணன், உதவி பொறியாளா் பிரின்ஸ் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள், துப்புரவு பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து ஆட்சியா் கி. செந்தில்ராஜ் செய்தியாளா்களிடம் கூறியது:

சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குகள் பதிவாக வேண்டும் என்பதற்காக பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடா்ச்சியாக, மாநகராட்சியின் சாா்பில் 100 திடக்கழிவு மேலாண்மை வாகனங்கள் மூலம் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்போம் விழிப்புணா்வு பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. எனவே, வாக்காளா்கள் அனைவரும் கண்டிப்பாக ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.