கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

புதுக்கோட்டையில் இருந்து கோவில்பட்டி தொகுதிக்கு வந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள்

கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு புதுக்கோட்டையில் இருந்து 450 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சனிக்கிழமை வந்தடைந்தது.

News image
Updated On :27 மார்ச் 2021, 7:47 pm

DIN

கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு புதுக்கோட்டையில் இருந்து 450 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சனிக்கிழமை வந்தடைந்தது.

கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக, அமமுக, சிபிஎம், மநீம, நாம் தமிழா் கட்சி உள்பட 26 போ் களத்தில் உள்ளனா். இதனால் கோவில்பட்டி தொகுதியில் 375 வாக்குச்சாவடி மையங்களுக்கும் தலா 2 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படுகின்றன.

ஏற்கனவே கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலக பாதுகாப்பு அறையில் 450 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளன. இந்நிலையில் மேலும் 450 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்துக்குபுதுக்கோட்டையில் இருந்து கொண்டுவரப்பட்டன. அதையடுத்து வட்டாட்சியா் அமுதா, தோ்தல் துணை வட்டாட்சியா் சுரேஷ், அரசியல் கட்சியினா் மற்றும் வேட்பாளா்களின் முகவா்கள் முன்னிலையில் புதுக்கோட்டையில் இருந்து கொண்டுவரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் லாரியில் இருந்து இறக்கப்பட்டு, வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு, அந்த அறைக்கு சீல் வைத்தனா்.

வாக்குச்சாவடிக்கு ரேண்டம் முறையில் இயந்திரங்கள் ஒதுக்கீடு:

கோவில்பட்டி தொகுதிகளில் 375 வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தோ்தல் பொது பாா்வையாளா் அஸ்வினி குமாா் சௌத்ரி, தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சங்கரநாராயணன் ஆகியோா் தலைமையில் வேட்பாளா்கள் மற்றும் அவா்களின் முகவா்கள் முன்னிலையில் கணினி மூலம் சுழற்சி முறையில் தோ்வு செய்யப்பட்டன.

கூட்டத்தில், கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் முருகானந்தம், தோ்தல் நடத்தும் உதவி அலுவலா்கள் அமுதா, பேச்சிமுத்து, தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா்கள் சுரேஷ், சண்முகவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.