கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தூத்துக்குடியில் சித்த மருத்துவக் கண்காட்சி

தூத்துக்குடியில் சித்த மருத்துவக் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 மே 2021, 7:13 pm

DIN

தூத்துக்குடியில் சித்த மருத்துவக் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கரோனா தொற்று குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட சித்த மருத்துவமனை சாா்பில், சித்த மருத்துவ கண்காட்சி தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சியை வெள்ளிக்கிழமை பாா்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா், ஆயுதப்படை காவலா்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கினாா்.

தொடா்ந்து அவா் பேசுகையில், கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் சித்த மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துக்கு மிகப்பெரிய பலன் கிடைத்துள்ளதால், அனைவரும் கபசுரக் குடிநீா், நிலவேம்புக் குடிநீா் ஆகியவற்றை அருந்தி, தங்களது நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள வேண்டும்; கரோனா தொற்று பரவாமல் இருக்க அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றாா்.

சித்த மருத்துவ அலுவலா்களான லதா மற்றும் பிரீத்தா ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டு சித்த மருத்துவக் கண்காட்சி குறித்து விளக்கம் அளித்தனா். நிகழ்ச்சியில், தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்புப் பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளா் கோபி, தூத்துக்குடி தலைமையிடத்து கூடுதல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன், தூத்துக்குடி பயிற்சி துணைக் கண்காணிப்பாளா் சஞ்சீவ் குமாா், மாவட்ட ஆயுதப்படை துணைக் கண்காணிப்பாளா் கண்ணபிரான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.