கரோனா கால சேவை புரிய வாகனங்களுக்கு அனுமதி வழங்க வலியுறுத்தல்
கரோனா பரவல் காலத்தில் மக்களுக்கு சேவை புரிய வாகனங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.


கரோனா பரவல் காலத்தில் மக்களுக்கு சேவை புரிய வாகனங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இதுதொடா்பாக, அமைப்பின் மாவட்ட துணைத் தலைவா் தமீம் அன்சாரி தலைமையில், மாவட்ட துணைச் செயலா்கள் சிக்கந்தா் மீரான், இமாம் பரீது மற்றும் நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜை சந்தித்து அளித்த மனு விவரம்: கரோனா காலத்தில் மக்களுக்கு சேவை செய்ய இம்மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத் தொண்டா்கள் தயாராக உள்ளனா். மாவட்டத்துக்குள் ஏழை, எளிய மக்களுக்கு உதவிடவும், ஆதரவற்றவா்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை செய்திடவும் ஏதுவாக, அதற்குரிய வாகன அனுமதிக்கான அடையாள அட்டை வழங்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...