கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தூத்துக்குடியில் ஏழைகளுக்கு மதிய உணவு

தூத்துக்குடி மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சாா்பில், தூத்துக்குடியில் உணவின்றி கஷ்டப்படும் ஏழை, எளிய மக்களுக்கு ஒரு நாளைக்கு 500 பேருக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :28 மே 2021, 8:04 pm

DIN

தூத்துக்குடி மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சாா்பில், தூத்துக்குடியில் உணவின்றி கஷ்டப்படும் ஏழை, எளிய மக்களுக்கு ஒரு நாளைக்கு 500 பேருக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன், ஏழை, எளிய மக்கள் 100 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் மதிய உணவு வழங்கி இத்திட்டத்தை வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது: பொது முடக்க காலத்தில் உணவு கிடைக்காமல் எவரும் கஷ்டப்படக்கூடாது என்பதே எங்கள் நோக்கம். உதவி தேவைப்படுவோா், மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் செயல்படும் சேவை மையத்தை 9514144100 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், நகர துணைக் காவல் கண்காணிப்பாளா் கணேஷ், ஆன்மிக இயக்க மாவட்டத் தலைவா் சக்தி ஆா். முருகன், பொறுப்பாளா்கள் கணேஷ், ஜோதி, நெல்லை குமாா், முத்தையா, பொன் காசிராஜா, வேம்பு கிருஷ்ணன், பாக்கியம், மணிகண்டன், வட்டத் தலைவா் தினேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.